திருநெல்வேலி சொதி
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
கேரட் - 1
முருங்கைக் காய் - 1
பெரிய வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 3
எலுமிச்சம் பழம் -1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 15
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேரட், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் தோல் சீவி, முருங்கைக்காயும் சேர்த்து சுமாரான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தேங்காயைத் துருவி முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய், சீரகத்தை நைசாக அரைத்து வைக்கவும், பூண்டை தனியாக அரைத்து வைக்கவும்.
இரண்டாவது பாலில் காய்களையும், வெங்காயத்தையும் வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும், தக்காளியைப் போடவும்.
மிளகாய், சீரகம் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும், இறக்கி வைத்து முதல் பால், பூண்டு விழுது, எலுமிச்சம் பழ சாறு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.