தாளக குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய்கள்: (தேவையான அளவு)

முருங்கை - 1/4 கப்

பரங்கி காய் - 1/4 கப்

கத்தரிக்காய் - 1/4 கப்

அவரைக்காய் - 1/4 கப்

கேரட் - 1/4 கப்

கொத்தவரங்காய் - 1/4 கப்

வாழைக்காய் - 1/4 கப்

சேனை - 1/4 கப்

புடலை - 1/4 கப்

சேப்பங்கிழங்கு 1/4 கப்

உருளை - 1/4 கப்

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

புளி - நெல்லிகாய அளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

வர மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 4

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

தணியா - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காய துள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

காய்களை நீளமாக வெட்ட வேண்டும்.

அரைக்க கூறியுள்ளவைகளை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கடைசியில் தேங்காய் துருவலுடன் அரைக்கவும்.

புளியை நன்றாக கரைத்து காய்களுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் மசாலவை சேர்க்கவும்.

பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்து நல்ல திக்காக வரும் போது அடுப்பை அணைத்து விட்டு. தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து அதில் சேர்க்கவும்.

மேலே கொஞ்சம் தேங்காய் எண்னெய் அல்லது 1 தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

குறிப்புகள்:

இந்த குழம்பு வெண் பொங்கலுக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.