தாளகம் எனப்படும் குழம்புகள்
தேவையான பொருட்கள்:
தாளகம் 1 செய்வதற்கு:
பச்சரிசி - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
கறுப்பு எள் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளகம் - 2 செய்வதற்கு:
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எழுகறிக்குழம்பு:
வெந்த துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
தாளகம் -1 செய்யும் முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே சிவக்க வறுத்து, அரைத்தோ அல்லது பொடி செய்தோ குழம்பில் சேர்க்கவும்.
நன்றாக கொதித்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் தாளித்துக் கொட்டவும்.
தேங்காயை முதலில் சேர்க்காவிட்டால், கடைசியில் வறுத்துப் போடலாம்.
தாளகம் -2 செய்யும் முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வாசனை வர வறுத்து, அரைத்து அல்லது பொடித்து குழம்பில் சேர்க்கவும்.
எழுகறிகுழம்பு செய்வதற்கு செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் வறுத்து பொடி செய்து போடவும்.
இறக்கின பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை முதலியவற்றை எண்ணெய்யில் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்துப் போடவும்.