தயிர் காய்ச்சியது
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தயிர் - 3/4 கப்
அரைத்த தேங்காய் விழுது - 1/4 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 5
பொடியாக நறுக்கியஇஞ்சி - ஒரு சின்ன துண்டு
நீளமாக கீறிய பச்சை மிளகாய் - 2
இரண்டாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 இலை
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, பருப்புகள் போட்டு தாளிக்கவும்.
அதில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் தீயை அணைத்து விட்டு தயிர், உப்பு சேர்த்து கலக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்.