தயிர்க் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

தயிர் - தேவைக்கேற்ப

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 4 பல்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இணுக்கு

தாளிக்க:

கடுகு, உளுந்து, சீரகம், எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு நன்கு வதக்கி ஆறவிடவும்.

நன்கு ஆறியதும் புளிக்காத தயிரில் போட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

பணியாரம், தோசையுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

சூடான சாதத்தை மசித்து இந்தக் குழம்பை ஊற்றி, சிறிது பால் சேர்த்து கலந்தால் சுவையான தயிர் சாதம் தயார்.