தனியா குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கைபிடி

தனியா - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 2

கருவேப்பிலை - தாளிக்க

எண்ணெய் - தே.கரண்டி

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சிறிது துவரம் பருப்பு , சோம்பு தாளித்து, வெங்காயம் இட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது அதில் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தக்காளியை சேர்த்து வதக்கி கரைய விடவும்.

ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை வருக்கவும், பின் மிளகு தனியாவை சேர்த்து வருத்து பொடி செய்யவும்.

தக்காளி கரைந்ததும் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 2 தம்லர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

பின் அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: