தட்டப்பயறு குழம்பு (காராமணி பயறு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தட்டப்பயறு - 100 கிராம்

வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 2

மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள், சோம்பு, சீரகப்பொடி - தலா 1/2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சையளவு

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - 2 சில்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தட்டப்பயறு வறுத்து வேகவிடவும். வெந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு கொதிக்கவிடவும்.

பிறகு மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், சோம்பு சீரகத்தூள் போடவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து குழம்பில் கொட்டவும். தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: