தஞ்சாவூர் கடும் பிட்ளை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1

கத்திரிக்காய் - 2

சேனைக்குழங்கு - 1 துண்டு

உருளைக்கிழங்கு - 1

தேங்காய் - 1

காய்ந்த மிளகாய் - 6

துவரம் பருப்பு - 1 கப்

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும்.

காய்கறிகளை குழம்புக்கு நறுக்குவது போல் நறுக்கவும்.

பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் நறுக்கிய காய்களைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

தேங்காய் எண்ணெயில் உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவலையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து, அத்துடன் சீரகம், மிளகையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கள் வெந்ததும் வேக வைத்த துவரம்பருப்பு, அரைத்த விழுது எல்லாவற்றையும் போட்டு, நன்றாக கொதித்தவுடன் தேங்காய் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கடலைப்ப்ருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

குறிப்புகள்: