தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

செளசெள - 1

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1/2 கொத்து

கொத்தமல்லி - 1/2 கொத்து

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைகரண்டி

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள்.

சௌசௌவை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்குங்கள்.

பருப்பில் சௌசௌ, சாம்பார் பொடி, பெருங்காயம்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து வேகவிட்டு புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள்.

புளி பச்சை வாசனை போக கொதித்த பிறகு, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: