தக்காளி குழம்பு (5)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/4 கிலோ

மிளகாய் வற்றல் - 5

சீரகம் - 2 தேக்கரண்டி

சிறிய வெங்காயம் - 10

தேங்காய் - ஒரு கீற்று

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளிப் பழங்களைத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல், சீரகம், தேங்காய் கீற்று ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய தக்காளிப் பழங்களைப் போட்டு வதக்கவும்.

அரைத்த மசாலாவினை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் மஞ்சத்தூள், தேவையான உப்பு சேர்த்து ஊற்றிக் கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

மசாலாவினை வெறும் தண்ணீரில் கரைப்பதற்கு பதில் புளித்தண்ணீரிலும் கரைத்து ஊற்றலாம். புளி கரைத்து ஊற்றும் பட்சத்தில் தேங்காய் சேர்க்க வேண்டாம்.

புளித்தண்ணீருக்கு பதில் அரை மூடி தேங்காயில் பால் எடுத்தும் ஊற்றலாம்.