தக்காளி குழம்பு(இட்லிக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிபருப்பு - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4 அல்லது 5

பூண்டு - 2 அல்லது 3 பல்

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

ஆறியதும், மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விடவும். உப்பு தேவையெனில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். தக்காளியின் புளிப்பே போதுமானது. இந்த குழம்பு கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்.

குறிப்புகள்:

இட்லிக்கு ரொம்ப பொருத்தமானதாக இருக்கும்.