தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
புளி - நெல்லி அளவு
எண்ணெய் - சிறிது
மஞ்சள் பொடி - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பழுத்த பெரிய தக்காளி - 2
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - சிறிது
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 4
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு. புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மெல்லியதாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து மூடி வைத்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
பச்சை வாசம் போனதும் புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு வதக்கிய கத்தரிக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
வேண்டிய காய்களைப் போட்டுக் கொள்ளலாம். காய் இல்லாமலும் சுவையாக இருக்கும்.
இறக்கும் போது ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்தால் சுவை கூடும்.