சோயா புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 27
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - பாதி
பூண்டு பல் - 10
பால் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனிமிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
சோயா உருண்டைகளை 2 தேக்கரண்டி பால் கலந்த சூடு நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து 3 முறை குளிர்ந்த நீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அதனுடன் சோயா உருண்டைகள் மற்றும் புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
நன்றாக தண்ணீர் வற்றி குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம் போட்டு ஒரு கரண்டி குழம்பு ஊற்றினால் போதும்.
நல்லெண்ணெயில் செய்து இருப்பதால் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.