சோயா குழம்பு
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய சோயா - 1 கப் (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
வெங்காயம் - 1 (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
கடுகு, வெந்தயம், சீரகம் - தாளிக்க
புளி - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆல் பர்பஸ் பொடிக்கு:
கடுகு - 25
கிராம் வெந்தயம் - 25
கிராம் சீரகம் - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
வெள்ளை எள் - 50 கிராம்
மிளகு தூள் - 50 கிராம்
கறிவேப்பிலை - 4 கொத்து
(காய்ந்தது) தனியா - 50 கிராம்
பெருங்காயம் - 15 கிராம்
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
சோயாவை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் அரைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த சோயாவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
மிளகாய் தூள் வாசம் போனதும், அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக ஆல் பர்பஸ் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். லேசாக அடிபிடிக்கும் அதனால் நன்கு கிளறவும்.
கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
ஆல் பர்பஸ் பொடி:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கல் தூசி பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் வெறும் வாணலியில் போட்டு தீயை மிதமாக வைத்து வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் பெருங்காயம் சேர்த்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்.
குறிப்புகள்:
வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம். புலாவ், இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, ஊத்தப்பம் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.