சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி

காரட் - 2

வெங்காயம் - 7

உருளை கிழங்கு - 2

மாங்காய் - 3 துண்டு

பச்சை மிளகாய் - 4

எலுமிச்சை - 1/2 மூடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டாம் சாறு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

பாசிப்பருப்பையும், உருளைக்கிழங்கையும் தனித்தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

காரட், உரித்த வெங்காயம், வேக வைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகியவற்றை இரண்டாம் பாலில் வேகவைத்துக் கொள்ளவும்.

பிறகு வேக வைத்த பாசிப்பருப்பை கலந்து அரை தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். உப்பு தேவையெனில் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.

ஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி வைத்ததும் அதில் முதல் தேங்காய் பால் ஊற்றி பிறகு கடுகு தாளித்து கொட்டி தேக்கரண்டி.

குறிப்புகள்: