சேப்பங்கிழங்கு புளி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

புளி - ஒரு லெமென் சைஸ்

தேங்காய் - 3 பத்தை

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேகரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி

சேர்க்க வேண்டிய பொடி வகைகள்:

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

வெந்தய பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

தாளிக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் தாளித்து பூண்டை பொடியாக நறுக்கி போடவும். வெங்காயம் முதலில் வதக்கி விட்டு பிறகு பொடியாக தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும், வதக்கி எல்லா தூள் வகைகளையும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து விடவும்.

பச்ச வாசனை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஊற்றி வெந்த சேப்பங்கிழங்கையும் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: