சேனைக்கிழங்கு மோர் குழம்பு
தேவையான பொருட்கள்:
நறுக்கின சேனைக்கிழங்கு துண்டுகள் - 1 கப்
கெட்டி மோர் சற்று புளிப்புடன் - 2 கப்
தேங்காய்ப்பூ - 1 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகு பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
நறுக்கின சேனைத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கால் கப் தண்ணீர், மஞ்சள் பொடி, சிறிது உப்பு, மிளகுப் பொடி சேர்த்து, ப்ரஷர் பானில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
தேங்காயையும் பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரைத் திறந்து அரைத்த விழுதினைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
பிறகு அதில் மோரை ஊற்றி வேக வைக்கவும். மோர் நுரைத்து வந்ததும் இறக்கி விடவும்.
இறக்கின பிறகு மீதி உப்பினைப் போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
மிளகு பொடி, பச்சைமிளகாய் அவரவர் விருப்படி கூடவோ, குறையவோ சேர்த்துக் கொள்ளலாம். மிளகு வாசனை விரும்பாதவர்கள் அது இல்லாமலும் செய்யலாம்.