செட்டிநாட்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சைபட்டாணி - 100 கிராம்

காரட் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

காலிஃபிளவர் - 100 கிராம்

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 5

கசகசா - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 2

தக்காளி - 5 (பெங்களூர் தக்காளி)

தேங்காய் - ஒரு மூடி

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்களை நறுக்கிப் போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி மற்ற சாமான்கள் யாவும் போட்டு வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்.

கடாயில் காய்கறி நன்றாக வதங்கியவுடன் புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி வேக விட வேண்டும்.

அதன் பிறகு அரைத்த மசாலா விழுது, மஞ்சள் தூள் போட்டு மேலும் 2 நிமிடம் நன்றாக வேக விடவும்.

குழம்பு நன்கு வெந்து சுருண்டு வரும்போது இறக்கி விட வேண்டும்.

குறிப்புகள்:

இது ஃப்ரைட் ரைஸ், சப்பாத்தி ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும்.