செட்டிநாடு தக்காளி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 5

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

வெல்லம் - 1 தேக்கரண்டி

புளி கரைசல் - 1 கப்

கறிவெப்பிலை - சிறிது

அரைக்க (1):

மிளகாய் வற்றல் - 5

இஞ்சி - 1/4 இன்ச்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

அரைக்க (2):

தேங்காய் துருவல் - 1/4 கப்

கசகசா - 2 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீலமாக வெட்டவும்.

தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.

பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.

அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)'ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.

இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.

புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.

இதில் அரைக்க (2)'ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: