சுரைக்காய் மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1 1/2 கப் (நறுக்கிய துண்டுகள்)
மோர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காயத்துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
செய்முறை:
சுரைக்காயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்
தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு சில நொடிகள் வறுக்கவும்.
பிறகு இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கூடவே நறுக்கி வைத்த சுரைக்காய், மஞ்சள்தூளை போட்டு வதக்கவும்.
காய் சில நிமிடங்கள் வதங்கியதும், அதனுடன் அரைத்து வைத்த தேங்காய், பச்சை மிளகாய் விழுதை போட்டு, சிறிது வதக்கி, ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். காய்க்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
இதனை மூடிப்போட்டு சில நிமிடங்கள் காய் வேகும் வரை விடவும்.
காய் வெந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, மீதி உள்ள உப்பு, மோர் இரண்டையும் விட்டு கலந்து விடவும். மோர் விடும்போது அடுப்பை குறைந்த தீயீல் வைக்கவும். நீண்ட நேரம் கொதிக்க விட்டால், மோர் திரிந்துவிடும். லேசாக ஒரு கொதி வரவிருக்கும் நிலையில், அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்.