சுரைக்காய் கோஃப்தா குழம்பு
தேவையான பொருட்கள்:
கோஃப்தாவுக்கு:
துருவிய சுரைக்காய் - 1 கப்
பொட்டுக்கடலைப்பொடி - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குழம்புக்கு:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
கோஃப்தாவுக்கு தேவையான எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டையாக்கி ஆவியில் வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வெந்து கிரேவியானதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், 1/2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் கோஃப்தா சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்