சுண்டைக்காய் வத்தக்குழம்பு
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வற்றல் - 1/2 கப்
குழம்பு மிளகாப்பொடி - ஒரு கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
நல்லெண்ணை - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நன்கு பொரிந்ததும் சுண்டைக்காய் சேர்த்து வறுக்கவும்.
நன்கு பொறிந்ததும்புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
குழம்பு மிளகா பொடியை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும்,
எல்லாம் சேர்ந்து புளிவாசனைபோக கொதித்ததும் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.