சுண்டைக்காய் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தட்டிய சுண்டைக்காய் - 1 கப்

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 2

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி விழுது - 3 தேக்கரண்டி

மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - சிறிது

தாளிக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - சிறிது

செய்முறை:

சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்ததும் வெங்காயம், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி, மஞ்சள் தூள், சுண்டைக்காய் சேர்த்து தண்ணீர் 1/2 கப் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

அதனுடன் புளி விழுது, உப்பு, மிளகாய் தூள், தண்ணீர் சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்.

தாளிக்கும் பாத்திரத்தில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்த்து நன்கு வதக்கிய பின் பரிமாறவும்.

குறிப்புகள்: