சுண்டவத்தல் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுண்ட வத்தல் - 15

வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி

புளி - 1 கோலியளவு (கெட்டியாக கரைத்தது)

எண்ணை - தாளிக்க

நல்லெண்ணைய் - 3 தேக்கரண்டி

உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, வெங்காயத்தை போடவும்.

பின் பெருங்காயத்தூள், வெந்தயத்தூளை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து உப்பு போட்டு நன்கு பேஸ்ட் போல செய்யவும்.

சாம்பார் பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் புளி தண்ணீரை விடவும்.

பின் தாளிக்கும் கரண்டியில் நல்லெண்ணைய் 2 ஸ்பூன் விட்டு சுண்ட வத்தலை வறுத்து எண்ணையுடன் குழம்பில் கொட்டவும்.

மீதியுள்ள எண்ணையையும் சேர்க்கவும்.

குழம்பி நன்கு கொதித்து வற்றி எண்ணைய் மேலே மிதக்கும் வரை காய்ச்சி பரிமாறவும்.

குறிப்புகள்:

வயிற்றில் உள்ள பூச்சி எல்லாம் சாகும் தன்மை சுண்டவத்தலுக்கு உள்ளது.