சீரக குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 4 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1/2

நறுக்கிய தக்காளி - 1

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

புளி கரைசல் - 1/4 கப்

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

பின் சீரகம் சேர்த்து லேசாக வதக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயம், உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.

சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்(அதிகம் சேர்க்க வேண்டாம், குழம்பு தண்ணியாக இருக்கும்).

தூள் வாசம் போக கொதித்ததும், புளி கரைசல் சேர்த்து குழம்பு பதத்தில் எண்ணெய் திரண்டு வரும்போது இரக்கி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: