சிவப்புக்கீரை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய சிவப்புக்கீரை - 1 கட்டு

தக்காளி - 2

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

துவரம் பருப்பு - 1/2 கப்

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணைய் - 3 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம் போடவும்.

பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி பின் கீரையை போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.

3 நிமிடங்கள் கழித்து உப்பு போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு பின் சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்து பின் அதை கடையவும்.

மீண்டும் அடுப்பில் வைத்து அதில் வேகவைத்த பருப்பை போட்டு நன்கு கலக்கி கொதித்தபின் இறக்கி பறிமாறவும்.

குறிப்புகள்: