சிம்பிள் கத்தரி குழம்பு

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சை கத்தரிக்காய் - 3

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 20

வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

புளி - எலுமிச்சையளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணை - தேவையான அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

சின்னவேங்காயம் தோலுரித்து பொடியாக நறுக்கவும்

கத்தரிக்காயை விரல் நீள சைசிற்கு நறுக்கவும்

தக்காளீயை பொடியாக நறுக்கவும்

முதலில் அரிசி கழுவிய நீரை 4 கப் எடுத்து கொண்டு அதில் புளியை ஊறவிடவும்.ஊறீயதும் கரைத்து வடிகட்டவும்

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,வெந்தயம் ,சீரகம்,காய்ந்தமிளகாய்,கறிவேப்பிலை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.

அதில் வெங்காயம்போட்டு வதக்கவும்.

வதங்கியதும் அதில் சாம்பார்த்தூளை சேர்த்து வதக்கவும்

பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதில் கத்தரிக்காய் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும்.

வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.

தேவையான உப்பு சேர்த்து புளீக்கரைசலை விட்டு கொதிக்கவிடவும்

கெட்டியாக எண்ணைய் மிதக்கும்வரை கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: