சின்ன வெங்காயக்குழம்பு
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயாம் - 15
தக்காளி - 2
சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளிஐ சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்து வைத்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் .தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயாத்தை போட்டு வெங்காயம் நன்கு வதங்கியப்பின், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பூண்டை தட்டு போட்டு புளி கரைசலை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பையும் போட்டு, 2 கப் தண்ணிர் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து கட்டியானதும் இறக்கி பரிமாறவும்.