கோவைக்காய் புளி குழம்பு (சர்க்கரை வியாதிக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோவக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - 4

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

புளி - ஒரு எலுமிச்சை அளவு

வெல்லம் - ஒரு பிட்டு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் - 5

தனியா - 1 மேசைக்கரண்டி

அரிசி - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கடுகு - 1 தேக்கரண்டி

பூண்டு - 3 பல் (தட்டி கொள்ளவும்)

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

கோவைக்காயை நறுக்கி கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

பொடிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து பொடிக்கவும். எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பிறகு புளி தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். வெல்லம் ஒரு பிட்டு சேர்க்கவும்.

கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: