கொள்ளு குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பில்லை - 3 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - கடைசியில் தூவ
உப்பு - தேவையான அளவு
முதலில் தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
கடைசியில் தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
செய்முறை:
கொள்ளினை 2 -3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
ஊறவைத்த கொள்ளினை பிரஷ்ர் குக்கரில் சுண்டல் வேகவைப்பது போல 3 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை வெட்டி கொள்ளவும்.
பூண்டினை நசுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் நசுக்கிய பூண்டினை போட்டு வதக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் தக்காளியை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு வேகவைத்த கொள்ளினை சேர்த்து தேவையான அளவு தண்ணீருடன் நன்றாக கொதிக்கவிடவும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து குழப்பில் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாயையும் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.