கொள்ளுப் பயறு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 150 கிராம்

கத்தரிக்காய் - 2

உருளைக்கிழங்கு - 1

சிறிய தக்காளி ‍- 1

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

இஞ்சி ‍- சிறு துண்டு

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் தூள் ‍- 1 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் ‍- 2 தேக்கரண்டி

குரு மிளகு ‍- 1/2 தேக்கரண்டி

சீரகம் - ‍ 1/2 தேக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

தேங்காய் - ‍கால் மூடி (அல்லது) தேங்காய் துருவல் 4 தேக்கரண்டி

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான‌ அளவு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, குரு மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வதக்கியெடுத்து ஆறவைத்து, மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து விழுதாக‌ அரைத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக‌ அரைத்து வைக்கவும்.

புளியுடன் சிறிது நீர் ஊற்றி ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.

கொள்ளை நன்கு சுத்தம் செய்து அலசி ஒரு நாள் முழுவதும் ஊற‌விட்டு, பிறகு அதை இரவில் ஒரு துணியில் கட்டி வெளிச்சம் படாமல் வைக்கவும். காலையில் நன்கு முளைத்து இருக்கும். அத்துடன் சிறிது நீர் ஊற்றி வேக‌ வைக்கவும்.

ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காய‌ விழுது, பெரிய துண்டுகளாக‌ நறுக்கிய‌ கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க‌விடவும்.

நன்கு கொதித்து, காய்கறிகளும், கொள்ளும் நன்கு வெந்த‌தும் புளிக்கரைசல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

விரும்பினால் தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சிறிது சின்ன வெங்காயம் தாளித்து குழம்பில் சேர்க்கலாம்.