கொத்தவரங்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்:
கொத்தவரங்காய் - 1 கப்
கெட்டி மோர் சற்று புளிப்புடன் - 2 கப்
மஞ்சள் தூள் - சிறிது
அரைக்க:
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை:
கொத்தவரையை 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தவரங்காயுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, தனியா, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதினை வேக வைத்த கொத்தவரங்காயுடன் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
அதன் பின் மோரை கொத்தவரங்காயுடன் கலந்து, நுரைக்க கொதித்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் மோர் குழம்பில் சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
கொத்தவரங்காய்க்கு பதிலாக கத்தரிக்காயை சேர்த்தும் மோர் குழம்பு செய்யலாம். கத்தரிக்காய்களைத் துண்டங்களாக நறுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி விட்டு, பிறகு மேற்கண்டவாறு செய்யவும்.
தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள், ஒரு கப் தேங்காய் எனும் இடத்தில் 2 மேசைக்கரண்டி தேங்காயும், மீதி துருவிய காரட்டும் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல நிறத்துடனும், ருசியுடனும் இருக்கும்.
புளிக்காத தக்காளி ஒன்று அல்லது இரண்டு சேர்த்து, தேங்காயைக் குறைத்துக் கொண்டு அரைத்தாலும் நன்றாக இருக்கும். காரமும் புளிப்பும் அவரவர் தேவைக்கேற்றாற் போல் சேர்த்துக் கொள்ளவும். குழம்பை இறக்கி வைத்த பிறகு உப்பைச் சேர்த்தால் மோர் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை.