கொத்தவரங்காய் புளி குழம்பு
தேவையான பொருட்கள்:
சற்று பெரியதாக நறுக்கிய கொத்தவரங்காய் - 10
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை,கொத்துமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிக்ஸியில் அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் - 4 மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லி பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் - சிறிது
செய்முறை:
கொத்தவரங்காயை (நீராவியில்/தண்ணீரில்) வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் ,மிளகாய் பொடி ,மல்லி பொடி,மஞ்சள் பொடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துகொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு ,கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின் வெங்காயம், தக்காளி ,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்,பாதி கொதி வந்ததும் வேகவைத்த கொத்தவரங்காயை சேர்த்து கொதிக்க விடவும், நன்கு கொதி வந்ததும் புளி கரைசலை சேர்த்து பின் 5 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்.