கொத்தமல்லி குழம்பு
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1 தேக்கரண்டி
தனியா - 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
கடுகு, உளுந்து, கடலைபருப்பு - தாளிக்க
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல், சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் வதங்கியதும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
இவை எல்லாம் ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
கடாயில் மீதம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் புளி கரைசல் மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதத்துடன் அருமையாக இருக்கும்.