கொண்டைக்கடலை வறுத்தரைத்தக்குழம்பு
தேவையான பொருட்கள்:
வேகவைக்க:
கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை நல்ல ப்ரவுன்நிறமாக வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
முதலில் வேகவைக்க கொடுத்துள்ளவற்றை எல்லாம் குக்கரில் போட்டு 8 விசில் விடவும்.
பிறகு வறுத்த தேங்காயை நன்கு மையாக அரைத்து வெந்து ஆவியடங்கிய குக்கரை திறந்து சேர்த்து கொதிக்க விடவும்.
பின் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து குழம்பில் கொட்டி பரிமாறவும்.