கொண்டைக்கடலை புளி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டைக்கடலை - 1/2 டம்ளர்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

தனியா - 1 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

தேங்காய் - 3 துண்டுகள்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

பூண்டு - 3 பல்

பெருங்காயம் - ஒரு பின்ச் (சிறிது)

வெங்காயம் - 1

தக்காளி - 1

செய்முறை:

கருப்பு கொண்டைக்கடலையை ஒரு நாள் முன்பே ஊறவைக்கவும். சுமார் எட்டு மணி நேரம்.

காலையில் குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலையை போட்டு வேகவைக்கவும்.

கருனை(சேனை) கிழங்கை மீடியம் அளவாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து விடவும்.

மிளகாய், தனியா, சீரகத்தை வறுத்து தேங்காயுடன் சேர்த்து கொரப்கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

தனியாக எண்ணெயை காய வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்கயாம் தக்காளி சேர்த்து வதக்கி, புளியை கரைத்து ஊற்றவும். அரைத்து வைத்துள்ளதையும் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.

மசாலா வாசனை, புளி வாசனை, தேங்காய் எல்லாம் கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி சாப்பிடவும்.

குறிப்புகள்: