கொண்டைக்கடலை குழம்பு (4)
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 4
புளி - கோலிக்குண்டு அளவு
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் உப்பு போட்டு குக்கரில் 2 விசில் வைத்து வேகவைக்கவும்.
வெந்த கடலையை அடுப்பில் வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு சீரகத்தூள் போட்டு கொதிக்கவிடவும்.
கொதிக்கும்போது புளியை கரைத்து ஊற்றவும். எல்லாம் கொதித்தவுடன் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து குழம்பில் கொட்டவும். கடைசியாக தேங்காய் அரைத்து ஊற்றி கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.