கொண்டைக்கடலை குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/4 மூடி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே கழுவி ஊறவைக்கவும். அதே தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். தேங்காயை துருவி மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும்.
தேவையென்றால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுது சேர்த்து தேவையான உப்பு சேர்க்கவும். எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி பரிமாறவும்.