கொண்டைக்கடலை குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊற வைத்த கொண்டைக்கடலை - 100 கிராம்

வறுக்க:

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 கப்

சின்ன வெங்காயம் - 2

சோம்பு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

கறிவேப்பிலை - சிறிது

பச்சைமிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், சோம்பு போட்டு பொரிந்ததும் அதில் தேங்காயை போட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கொண்டைக்கடலை, உப்பு, அரைத்த தேங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு சிறுதீயில் கால் மணி நேரம் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: