கொண்டைக்கடலை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1 கப்

பெரிய வெங்காயம் - 1 (அல்லது) சின்ன வெங்காயம் 10

தக்காளி - 1

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

பின் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி நீர் விட்டு தூள் வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, பின் தேங்காய் துருவல் சேர்த்து வாசம் வரும் வரை பிரட்டி எடுக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

தூள் வாசம் போக குழம்பு கொதித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொதித்ததும், புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கடைசியாக பொடித்து வைத்த பருப்பு தூளை சேர்க்கவும். சற்று கெட்டியாகும். தேவையான அளவு நீர் சேர்க்கவும். நன்றாக எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: