கொட்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய், கத்தரிக்காய், வெள்ளிக்கிழங்கு அல்லது கத்தரி, அவரை வற்றல் - 3

புளி - 1 எலுமிச்சை அளவு

மிளகாய் - 1

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தை தாளிக்கவும்.

புளியை 1/2 கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்து ஊற்றவும்.

அதில் காயையோ அல்லது வற்றலையோ சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் மீதி புளியை கரைத்து சேர்த்து சாம்பார் பொடி, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

புளி வாசனை போனதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

குழம்பு தண்ணீராக இருந்தால் 1 ஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து விடவும்.