கேரளா மோர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளித்த மோர் - 2 டம்ளர்

பச்சரிசி - 1 மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/4 மூடி

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த அரிசி, தேங்காய், மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

கெட்டியாக வரும் போது கடைந்த மோரை ஊற்றவும்.

நுரைத்து வரும் போது, இறக்கி தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: