குருமா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 10

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

தேங்காய் - ஒரு மூடி

சோம்பு - 1 மேசைக்கரண்டி

பட்டை - 2

மிளகாய் தூள் - 1/4 கப்

புளி - சின்ன எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டையை சிறு சிறுத் துண்டுகளாக உடைத்து போட்டு அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன் பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி விடவும்.

மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சோம்பு, தேங்காய் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கிய பிறகு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை போட்டு தீயை குறைத்து வைத்து ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.

அதன் பின்னர் அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். விரும்பியவர்கள் வாசனைக்காக அரை தேக்கரண்டி மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி விட்ட பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைத்து குருமாவை நன்கு 8 நிமிடம் கொதிக்க விடவும்.

குருமா கொதித்து வாசனை வரும் போது மூடியை திறந்து ஒரு முறை கலக்கி விட்டு அதன் பின்னர் தீயை குறைத்து வைத்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: