கீரை குழம்பு (ஈசி முறை)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி அளவு

சுத்தம் செய்த கீரை - 2 கைப்பிடி

சாம்பார் தூள் - 2 மேசைக்கரண்டி

வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1 என்னம்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 இனுக்கு

புளி - 1/4 கோலி அளவு

தாளிக்க:

கடுகு , உளுந்து - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

சிவப்பு மிளகாய் - 2

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை,வெங்காயம், தக்காளி, புளி, கறிவேப்பிலை,சாம்பார் தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

பின் ஆறவைத்து கடைந்தாலும் சரி இல்லை எனில் மிக்ஸியில் 2 நொடி அடித்து (திப்பி திப்பியாக) வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து தாளித்து மிளகாய், கறிவேப்பிலையை போட்டு அரைத்த கீரை விழுதை ஊற்றி வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்.

பின் தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பறிமாறவும்.

குறிப்புகள்: