கீரை உருண்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1/2 கிலோ

கடலை மாவு - 1/2 கோப்பை

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு பிடி

எண்ணெய் - 1 கோப்பை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு சுத்தம் செய்து சுடுதண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டு நன்கு வேகவைத்து வடித்து நீரை தனியாக தேக்கி வைக்கவும்.

பிறகு அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெந்த கீரையை கொட்டி கீரையில் ஊள்ள நீர் சுண்டும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு அதனுடன் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கியவுடன் கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

தக்காளியை நன்கு கரைத்து வைக்கவும். வெங்காயம் பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

பிறகு குழிவான சட்டியில் எண்ணெயை காயவைத்து உருண்டைகளை இரண்டு மூன்றாக போட்டு பொரித்து வைக்கவும்.

பிறகு அதே சட்டியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் இருக்கும் படி செய்து வெங்காய விழுது இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.

பிறகு எல்லாத்தூளை போட்டு கொத்தமல்லியையும், உப்பையும் போட்டு ஒரு கோப்பை கீரை வெந்த நீரைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியவுடன் கீரை உருண்டைகளைப் போட்டு அடுப்பின் அனலை மிக குறைந்த அனலில் வைக்கவும்.

ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து விட்டு, அதை பரிமாறும் தட்டில் உருண்டைகளை அரித்து எடுத்து அதில் வைத்து குழம்பை மேலாக ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: