கீரைத் தண்டு, தட்டைப் பயறு குழம்பு
தேவையான பொருட்கள்:
தட்டைப் பயறு - 200 கிராம்
நறுக்கிய கீரைத் தண்டு - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புளி - பெரிய நெல்லிக்காயளவு
கடுகு, உளுந்து - தாளிக்க
எண்ணை - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
வர மிளகாய் - 10
மல்லி - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 10
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் தட்டைப் பயறினை வாசம் வர வறுத்து பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். (குக்கராயிருந்தால் ஒரு விசில் வைக்கவும்)
சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
தேங்காயை தவிர அரைக்க வைத்துள்ள மற்ற பொருள்களை வறுத்து இறக்கப் போகும் நேரத்தில் தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து அரைத்த விழுதினை சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயம், ப. மிளகாய் போட்டு வதக்கி, தக்காளி சேர்க்கவும்.
பிறகு கீரைத் தண்டை போட்டு வதக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து வேக வைத்துள்ள பயறு, கரைத்த மசாலா,தேவையான அளவு நீர் சேர்த்து சேர்த்து கொதிக்க விடவும்.
பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
மீதமுள்ள எண்ணையில் கடுகு & உளுந்து, சோம்பு சிறிது, இரண்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி மூடி வைக்கவும்.