கீரைதண்டு தேங்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீரைதண்டு - 15 துண்டுகள்

சின்ன வெங்காயம் - 5

சிறிய தக்காளி - 1

தேங்காய் துருவல் - 1 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கீற்று

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரைதண்டு நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், சின்ன வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், சீரகம், பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தவிழுதினை எடுத்துவைத்துவிட்டு, மிக்ஸியை 1 கப் தண்ணீர் விட்டு கழுவி அந்த தண்ணீரையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி, போட்டு நன்றாக வதக்கவும் அடுத்து கீரைதண்டை போட்டு வதக்கவும். அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் போட்டு வேக வைக்கவும். நல்ல தண்டு என்றால் சீக்கீரம் வெந்துவிடும்.

கீரைதண்டு வெந்தவுடன் அரைத்த விழுதினை சேர்த்து அதில் மிக்ஸியை கழுவி எடுத்து வைத்துள்ள தண்ணீர் ஒரு கப் விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

ஒரு கரண்டியால் கலவையை ஒரு தடவை கிளறி விட்டு, குழம்பில் உப்பு போதுமா என்று பார்க்கவும், தேவை என்றால் உப்பு போடவும்.

குழம்பு கெட்டியாக வேண்டுமாயின் தண்ணீர் சேர்க்க வேண்டாம், அல்லது ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

கலவை நுரைத்து வரும் போது இறக்கி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: