காளான் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளான் - ஒரு பாக்கெட்

சின்ன வெங்காயம் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

தக்காளி - 2

கறிவேப்பிலை - 1 கப்

பூண்டு - 6 பல்

இஞ்சி - ஒரு அங்குல துண்டு

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 6

புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

ஆறியபின் தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் காளான் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: