காளான் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளான் - 2 பாக்கெட்

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - சிறு துண்டு

சின்ன வெங்காயம் - 5

கறிவேப்பிலை - 5 இணுக்கு

தக்காளி - 1

தேங்காய் - 2 துண்டுகள்

பச்சை மிளகாய் - தேவையான அளவு

கடுகு - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

மல்லி விதை - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

அரிசி - 1 தேக்கரண்டி

சோம்பு - சிறிது

கறிவேப்பிலை - 4 இணுக்கு

சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். காளானை சுத்தமாகக் கழுவி துடைத்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து ஆறவைக்கவும்.

ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் காளானைச் சேர்த்து வதக்கி, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.

காளான் நீர்விடத் தொடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.

பச்சை வாசனை போனதும் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

மல்லித் தழை தூவி பரிமாறவும். இட்லி, தோசை, சாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும்.