காளன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேனை, வாழைக்காய், பூசணிக்காய், கீரைத்தண்டு, சௌ சௌ - எல்லாம் சேர்ந்து நீளவாக்கில் வெட்டியது - 2 கப் (சற்று பருமனாக வெட்ட வேண்டும்).

புளித்த தயிர் - 1/2 லிட்டர்

பச்சை மிளகாய் - 7

மிளகு - 1/4 தேக்கரண்டி

தேங்காய் - 1 பெரிய மூடி

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய், மிளகு, மிளகாய் மூன்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

காய்களை உப்பு, மஞ்சள் தூள்போட்டு வேக வைக்கவும்.

அரைத்த விழுதுடன் தயிர் சேர்த்து வெந்த காய்களுடன் கலந்து கொதிக்க விடவும்.

மேலே நுரைத்து வர வர அந்த ஆடைகளை எடுத்து தனியாக வைத்துக் கொண்டே வர வேண்டும்.

கொதித்து பாதியாக வற்றியதும் எடுத்து வைத்த ஆடைகளை சேர்த்துக் கலக்கி இறக்கி தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: